மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் யானை ஒன்று மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை 06.10 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட புகையிரத்தில், மன்னம்பிட்டி மற்றும் கல்லால புகையிரத நிலைத்திற்கிடைப்பட்ட பகுதியில், காலை 08.35 மணியளவில், குறித்த யானை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில், வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளதாக, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.