மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலைக்குடாவை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவருவதாவது,
குறித்த நபர் வயலுக்கு காவலுக்கு சென்றவேளை இன்று திங்கட்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் யானை துரத்தியுள்ளது. யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டு குறித்த நபர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=MUy8meTTuN
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்