-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெற்ற புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான திகிலிவெட்டை குளத்துவெட்டை ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 61ஆவது வருடாந்த திரு சடங்கு உற்சவ பெருவிழாவும் 12ஆவது வருட 108 சங்காபிஷேகமும் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
ஆலயத்தின் சம்பிரதாய முறைப்படி ஆற்று நீர் எடுத்து கும்பங்கள் வைத்து ஆரம்பமான திருச்சடங்கானது தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்று 6ஆவது நாள் தீமிதிப்பு குளிர்த்தி பாடலுடன் நிறைவு பெறவுள்ளது.
மேலும் இந்த ஆலயமானது ஆகம முறைப்படியும், அதேனோடு இணைந்ததாக கிராமத்து முறையில் ஆதிகாலம் தொட்டு ஆலய விழாக்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.