மட்டக்களப்பு காத்தான்குடியில் உயிர் இழந்த நிலையில் அதிகளவான மீன்கள் கரையொதுங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மீன்கள் சேதமடைந்த நிலையில் கரையொதுங்குவதாகவும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்தபகுதியில் மீன்கள் கரையொதுங்குவதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.