மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இhன்போது தேரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வலம்புரி சங்கு மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.