இலங்கை போக்குவரத்து சபையின், மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து சேவை மீது பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சாலையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள், மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு செல்வதில்லை, என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற வேறு மாகாணங்களில் இருந்து மட்டக்களப்புக்கு வரும் பேருந்துகள், சின்ன ஆஸ்பத்திரி நிறுத்தத்தில், மட்டக்களப்பு நகர் பகுதியில் இறங்கும் பயணிகளை இறக்கி விட்டுசெல்வதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் பேருந்து நிலையம் இருக்கின்ற போதும், இவ்வாறு வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் பயணிகளை சின்ன ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறக்கி விட்டு அப்படியே காத்தான்குடிக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச பேருந்து நிலையம் என்று ஒன்று மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள போதும், அரச பேருந்துகள் அந்த பேருந்து நிலையத்திற்க சென்று பயணிகளை இறக்கிவிடுவதில்லை, இவ்வாறான நிலையில், குறித்த பேருந்து நிலையம் எதற்காக அங்கு இருக்கிறது? அதை சின்ன ஆஸ்பத்திரி இருக்கும் இடத்திற்கு மாற்றி விடலாமே, என பயணிகள் கேள்வி எழுப்பியுள்னர்.
மேலும், இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலை பேருந்துகள் தொடர்பில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்து, ஒரு தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ள போதும், மக்கள் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தால் அதற்கு பதில் அளிக்கப்படுவதி;லலை, எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பயணியொருவர் எமது செய்திச்சேவைக்கு வழங்கிய அதிருப்தியான தகவல்களின் பிரகாரம், இது தொடர்பில் தெரிவுபடுத்த மட்டக்களப்பு போக்குவரத்து சாலை அத்தியட்சகரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அது பலனளிக்கவில்லை.