நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணி முதல் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி சார் தலைவர்கள் தத்தமது வாக்குகளை உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று அளித்துவருகின்றனர்.
அதன்படி தமிழ் பொது வேட்பாளர் இன்று சனிக்கிழமை காலை அம்பளாந்துறை கலைமகள் வித்தியாலயத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள புனித மிக்கேல் கல்லூரியிலும், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வாழைச்சேனையில் உள்ள பாடசாலை ஒன்றிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதித் தவிசாளரும் சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.எம். சுபைர் ஆகியோர் ஏறாவூரில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.