-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 442 வாக்கெடுப்பு நிலையங்களில் மதியம் 12.00 மணி வரையிலும் 105,054 (23.36%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்தார்.
இதனடிப்படையில், கல்குடாத் தொகுதியில் 28,668 வாக்குகளும், மட்டக்களப்புத் தொகுதியில் 55,089 வாக்குகளும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 21,297 வாக்குகளும் அளிக்கப்பட்டடுள்ளன.
இவற்றில் அதிகளவு மக்கள் வாக்களித்த தொகுதியாக மட்டக்களப்பு தேர்தல் தொகுதி காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.