மட்டக்களப்பில் – புலதுசி கடுகதி ரயிலில் மோதி இளைஞர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கருவப்பங்கேணி, சிவநாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த அசோக்குமார் சனுஜன் (வயது-25)இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று மட்டக்களப்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த புலதுசி கடுகதி ரயிலில், இரவு 10 மணியளவில் மட்டக்களப்பு, திராய்மடுவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இளைஞர் மீது மோதியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.