மட்டக்களப்பு – தாளங்குடா பகுதியில் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் காத்தான்குடி பொலிசாரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பொது தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் ஆரம்பமான நிலையில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
இதேவேளை கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை சந்தேக நபர்கள் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.