மட்டக்களப்பு – செங்கலடி கொடுவாமடு பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீயினால் குப்பை மேடுகள் பகுதியளவில் எரிந்துள்ளதுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்தின் உதவியுடன் செங்கலடி பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
7 மணி நேரத்தின் பின்னரே தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை செயலாளர் வடிவேல் பற்குணம் தெரிவித்தார்