9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பிலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் ஆரம்பமான நிலையில் இதுவரையிலும் எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி அமைதியான முறையில் மக்கள் வாக்களித்துகொண்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கடமைகளுக்காக 1500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மட்டக்களப்பில் அனேகமான வாக்களிக்கும் நிலையங்களில் மக்களின்வருகை மிக குறைவாக இருந்தமையை எம்மால் காண முடிந்தது.



