மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் அலுவலகத்தின் பெயர் பலகை இனம்தெரியாத நபர்களின் சேதமாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள அலுவலக்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களின் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
