மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியால் சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றது தொடர்பாக ஏற்பட்ட சண்டை காரணமாக 19 வயது இளைஞன் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையடுத்து இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட 30 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
சுவிஸ்கிராமத்தைச் சேர்ந்த தங்கேஸ்வரன் அபிலாஸ் (வயது 19) என்ற இளைனனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் அந்த பகுதியிலுள்ள குறுக்கு வீதியால் சத்தமாக இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றுள்ளான் இதனையடுத்து அந்கு இடம்பெற்ற சண்டையினையடுத்து குறித்த இளைஞனை அவனது தந்தை அங்கிருந்து மீட்டு வீட்டிற்கு செல்லும் போது பின்னால் வந்தவர்கள் அந்த இளைஞனின் கழுத்து பகுதியிலும் நெஞ்சுபகுதியிலும் கூரிய ஆயத்தால் தாக்கப்பட்டதையடுத்து அவன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.