
மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வாழைச்சேனை நிருபர்
மட்டக்களப்பு நகரில் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“வடக்கு கிழக்கு மக்களையும் இளைய தலைமுறையினரையும் ஊழல் வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடாத்தியோர்களை கண்டிக்கிறோம்” எனும் தலைப்பில் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் இளையோர் அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டர்ளருமான ஜீ.தவேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகராஜா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் சிராணி தேவகுமார் ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.
ராஜபக்ச குடும்ப ஊழல்வாதிகளுக்கு பின்னால் மக்களை அடகு வைத்து பிழைப்பு நடாத்தியவர்கள் வடக்கு கிழக்கில் பலர் உள்ளனர் எனவும், மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் இதனை கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.