கொழும்பு, கிராண்ட்பாஸ் – ஜபோஸ்லேன் பிரதேசத்தில் நேற்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கிச் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலத்துறை – நவலோகபுர பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுகளைக் கொண்ட சகோதரர்களே இதன்போது உயிர் இழந்துள்ளனர்.
மேலும் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட குரோதம் நீடித்தமையே மோதலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.