மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாமடைந்து மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான சபீஸ் (வயது – 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டு நகர் லேடி மெனிங் வீதி ஊடாக காத்தான்குடி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும் காத்தான்குடியில் இருந்து மட்டு நகர் நோக்கி பயணித்த பேருந்தும் கல்லடி பாலதிற்கு அருகில் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் பிரயாணித்த மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.