இந்திய இசைக்கலைஞரான ஏ.ஆர். ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சு வலி காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
58 வயதான இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் இந்தியாவின் சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஹ்மான் தற்போது மருத்துவக் குழுவின் நெருக்கமான கண்காணிப்பில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ரஹ்மானுக்கு ஈசிஜி மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.