8 நிமிடத்தில் 5 வயதும் 11 மாதமும் நிறம்பிய சிறுமி 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை அபாகஸ் முறை மூலம் தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கிரீன்கார்டின் விடுதியில் இன்று 3.30 மணியளவில் கதிரவன் சோழன் உலக சாதனைப் புத்தக மட்டக்களப்பு நிறுவனத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பை சேர்ந்த வேல்முருகன் சகோதரர்களின் வாரிசான சுப்பிரமணியம் காவியஸ்ரீ (வயது – 5 வருடமும் 11 மாதங்களும்) சின்ன ஊறணியை சேர்ந்த சிறுமி 6 நிமிடம் 51 செக்கன் 50 மில்லி செக்கன்களில் 200 கணக்குகளை தீர்த்ததுடன், வாய் மூலமான கணித வினாக்களுக்கும் விடையை வழங்கினார்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்வி பணிப்பாளர் மண்முனை வடக்கு ஆர்.ஜே.பிரபாகரன், யு.சி.எம்.ஏ.எஸ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சித்திரா இளமநாதன், கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புலவர் வி.ரஞ்சித மூர்த்தி, கதிரவன் பட்டிமன்ற பேரவை ஆலோசகர் கவிஞர் அ.அன்பழகன் குரூஸ், உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ச.ஜெயராஜா, சோழன் உலகசாதனை புத்தகத்தின் கனேடிய நாட்டிற்கான தலைவரின் தாயார் பேரின்பம் பார்வதி பி.எச்.பி.எஃப் நிறுவனத்தின் முகாமையாளர், அகிலன் பவுண்டேசன் லண்டன் இணைப்பாளர் கலாநிதி வி.ஆர்.மகேந்திரன் ஜேபி. ஐஎஸ்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் சிறப்பு நடுவர்களாக இலங்கை சோழன் உலக புத்தக சாதனை நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, சோழன் உலகபுத்தக சாதனை நிறுவனத்தின் செயலாளர் சிவ வரதகரன், கலந்துகொண்டனர்.


