மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
அதனை தீர்க்குமுகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு ஆசிரியர் பற்றாக்குறையை தற்காலிகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரணில் 2024 செயற்குழுத் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக செட்டிப்பாளையம் மகாவித்தியாலயத்தின் கணிதம் மற்றும் பௌதீகவியல் ஆகிய இரண்டு பாடங்களுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த வாரம் கிரான் மகாவித்தியாலயம், நாவற்காடு மகாவித்தியாலயம், கறுவாக்கேணி மகாவித்தியாலய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளது.
இதற்கான கொடுப்பனவுகளை ரணில் 2024 செயலணி பெறுப்பேற்றுள்ளது, என அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளார்.