-மூதூர் நிருபர்-
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கெப் வாகனத்துடன் மோதுண்டு இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாடு காயமடைந்துள்ளது.எனினும் கெப் வாகனத்தில் பயணித்தோருக்கு எவ்வித ஆபத்தும் இடம்பெறவில்லை.
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பட்டித்திடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி கெப் ரக வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியை குறுக்காக கடக்க முற்பட்ட மாடுகளே இவ்வனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.
சம்பவ இடத்திற்கு மூதூர் போக்குவரத்து பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.