2030ஆம் ஆண்டில் மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள அணிகளின் எண்ணிக்கையை 16ஆக அதிகரிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை 2030 ஆம் ஆண்டில் மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரில் 16 அணிகளுக்கு வாய்ப்பளிப்பதற்கான யோசனைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பொதுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்