கல்கிசை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.