நாட்டில் பொலிஸார் மேற்கொண்டுள்ள விசேட சோதனை நடவடிக்கைக்கு தகவல்களை வழங்குவதற்காக இன்று வியாழக்கிழமை அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தலைமையில், 071 859 88 00 என்ற அவசர இலக்கம் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் வாயிலாக இன்று முதல் முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டு வருகின்றது.