பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 18 ஆம் திகதி தனது மகனால் தாக்கப்பட்டு காயமடைந்து மன்னம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதலுக்குள்ளான தாயாரின் வீட்டில் வளர்க்கப்படும் நாய் சந்தேக நபரான மகனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததால் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான மகன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்