-பதுளை நிருபர்-
குளவி கொட்டுக்கு இலக்கான பெண் பொலிஸ் கான்ஸ்டபில் மற்றும் எகிப்து நாட்டு பிரஜைகள் 9 பேர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக எல்ல சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 9 வளைவு பாலத்தை பார்வையிட சென்ற எகிப்து நாட்டு பிரஜைகள் 9 பேர் மற்றும் அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபில் உட்பட 10 பேர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 3.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை எல்ல சுற்றுலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.