தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை மேற்கோள் காட்டி, இலங்கை பொலிஸார் நிபந்தனைகளை விதித்ததை அடுத்து, நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் இணைந்த பேரணிக்காக தயார் செய்யப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.
ஒலிபெருக்கிகள் சற்றுமுன் அகற்றப்பட்டுள்ளதாக ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
தங்காலையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்று எதிர்க்கட்சி பேரணிக்கான ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த நுகேகொட பேரணி ஏற்பாட்டாளர்கள், பொலிஸார் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டம், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெற உள்ளது.