பதுளை, ஹல்தும்முல்ல நகரத்தில் உள்ள “பைனஸ்” வனப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
இந்த தீ பரவலினால் “பைனஸ்” வனப்பகுதியில் இதுவரை 10 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது.
வறண்ட காலநிலை காரணமாக அல்லது வேறு நபர்களினால் இந்த வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் தெரிவித்தார்.
தியத்தலாவை இராணுவ முகாமின் அதிகாரிகள் , பொலிஸ் அதிகாரிகள் , ஹல்தும்முல்ல பிரதேச செயலகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த தீ பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். “பைனஸ்” வனப்பகுதியில் தீ பரவல்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்