ராகம பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நுகவெல கெசல்வத்தையில் உள்ள கேரேஜ் ஒன்றில் இரகசியமாக ஒன்று கூடுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் கொட்டாஞ்சேனை, புளூமெண்டல், தெமட்டகொட, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 16 சிறுவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளடங்குகின்றனர்.