கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து மாரஸ்ஸன உடுதெனிய பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும், மயிலப்பிட்டி பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பாடசாலை பேருந்து ஒன்றும் தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் 18 வயதுடைய மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு முச்சக்கரவண்டியின் சாரதி, தந்தை மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ரிகலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி எதிரே பயணித்த வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே பேருந்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்துக்கு காரணமான பேருந்து சாரதியை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த யுவதியின் சடலம் மாரஸ்ஸன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்