முட்டையின் விலை குறைவினால் கிடைக்கும் நன்மையை மக்களுக்கு வழங்குமாறு பேக்கரி உற்பத்தியாளர்களிடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சந்தையில் முட்டை விலை குறைப்புக்கு நிகரான பலனை நுகர்வோருக்கு வழங்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை நேற்று கேட்டுள்ளது.