அமெரிக்கா – நியூயோர்க்கில் உள்ள ரோசெஸ்டர் நகரில் பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் 20 வயதுடையவர் எனவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்