மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 55 மாணவர்களில் 21 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதோடு இப்பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 வீதம் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய ரா. ஹிரிசிவ்னுஷன்(167), அ.நிர்த்திஹா (165), ச.அபிஹேஸ் (164), செ.ராண்மித்தூரன் (158), பெ.அஹிலாஸ் (157), வி.விஷாலி (154), வி.சஹாறிக்கா (154), சு.துவாஷ்னன் (152) , சி.யேஷகி (152), கா.தவிஸ்னகி (149) , கி.ருவஷ்ணவி (147), வி.தருனேஸ் (147), ஜெ.ஹீனுஷன் (147), ட.சி.சயோன் (146), த.டிறோணிக்கா (142), அ.ரக் ஷியன் (142), கே.துஜுஷா (141), மை.டே. றேனர் டிநோஸ் (140), பி.புவிசாந் (140), மு.கிஷானிக்கா (139), பே.கம்ஷயன் (139) ஆகிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ந்து சாதித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளதுடன் இம்முறையும் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன்முயற்சியால் E கல்வியின் அனுசரனையுடன் நடாத்தப்பட்ட விசேட (Zoom) சூம் வகுப்புகளும், மேலும் அதிபர் பூ.கமலதாசன் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளின் கீழ் திருமதி.நிதாஜினி சிவநாதன் , திருமதி. சிவாஜினி சிறீஸ் ஆகிய ஆசிரியைகளின் அயராத தொடர் கல்வி நடவடிக்கைகளின் காரணமாகவும் இப்பாடசாலையின் ஏனைய ஆசிரியர் குழாமின் பேராதரவுடன் இந்த வெற்றியை மாணவர்கள் பெற்றுள்ளார்கள்.
