தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முறைகேடு தொடர்பில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர் குழுவொன்று முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னதாக முறைப்பாடு செய்திருந்தது.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் முன்னதாக கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.