உங்களின் வெற்றி இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான பதிவாகும் – என ஈரோஸ் ஜனநாயக முன்னணிப் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பக்கம் நின்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாலும், அதிகமான மக்களின் விருப்பத்தைப் பெற்று நீங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள்.
இந்நிலையில் நீங்களே வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் ஜனாதிபதி என்பது இறைவன் அளித்த கொடையாகும்.
இவ்வாறான காலத்தில் இலஞ்சம் ஊழலற்ற நிலையில் சகலருக்கும் சமத்துவமான அரச நிர்வாக முறைமை மலரும் என நம்புகின்றோம். அதே நேரம் தமிழ் பேசும் சமூகங்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்துவீர்களென்று எதிர்ப்பார்க்கின்றோம்- என அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.