முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று வியாழக்கிழமை இடம்பெறுகிறது .விவாதம் மாலை 5.30 வரை நடைபெறும் .
கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த விவாதத்தை நடத்த முன்மொழியப்பட்டது.
இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது,
இருப்பினும் சட்டமூலம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விவாதத்தை எதிர்காலத்தில் நடத்த பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
