பிரபல பாதாள குழுவின் தலைவராக கருதப்படும் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸிலிருந்து பெலரசுக்கு செல்லும் பொது எல்லையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரையில் இலங்கை பாதுகாப்பு பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களம், சர்வதேச பொலிஸாரிடம் இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளது.
இதேவேளை க்ளப் வசந்தவின் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் லொக்குபெட்டி எனப்படுபவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரையும் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்