இராஜதந்திர சேவைக்காலத்தை பூர்த்தி செய்து புறப்படவிருக்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக வழங்கிய பங்களிப்பை தாம் பாராட்டுவதாக கொரியத் தூதுவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.