பிரபல பாடகி பாலியல் பலாத்காரம்: கைதான பிரபலம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அதே இசை குழுவின் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜா எல துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது கிட்டார் கலைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 28 வயதான இளம்பெண், சந்தேக நபர் தனது இசைக்குழுவின் பயண பேருந்திற்குள் வைத்து உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான , சந்தேக நபர் வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்