பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்தார். அதை லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி ஆமோதித்தார்.
அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பண்டார அதை ஆமோதித்தார்.
எனினும், பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த விமல் வீரவங்ச, தேர்தலை நடத்துவதற்கு சுமார் 9 மில்லியன் ரூபா செலவாகும், என குறிப்பிட்டார்.
இவற்றை தொடர்ந்து தற்சமயம் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.