மஹவயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் விரைவு ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
திம்பிரியகெதர நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதுடன், மோசமான வானிலை காரணமாக புகையிரதத்தை இயக்குவதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.