இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் 400 கிராம் கிராம் பால்மா 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.