இலங்கைக்கு தெற்காக 130 கிலோமீற்றர் தொலைவில் பாரியளவான போதைப் பொருட்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த படகுகளில் இருந்து 200 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தற்போது காலியில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.