புதிய பாதுகாப்புச் செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
துயகோந்தா 33 வருடங்களுக்கும் மேலான சேவையை முடித்து 2021 நவம்பர் 26 அன்று இலங்கை விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றார்
இதேவேளை, பொது பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி சேனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இன்று திங்கட்கிழமை காலை அவர் பொது பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.