ஜனாதிபதி நிதியத்தின் தலையீட்டுடன் பாணந்துறை விஜேவர்தன மகளிர் இல்லம் நேற்று முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
மகளிர் இல்ல நிர்வாக சபையினால் ஜனாதிபதி நிதியத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இலங்கை கடற்படையின் பங்களிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், மகளிர் இல்லத்தின் தங்குமிடங்கள், சமையலறை மற்றும் ஏனைய இடங்கள் வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டதோடு, செயல்படாத மின்விசிறிகள் மற்றும் உபகரணங்கள் சீரமைக்கப்பட்டன.

