லுணுவில, தெமட்டபிட்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் வாயிலுக்கு அருகில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலம் மீட்டுள்ளது.
வென்னப்புவ தும்மலதெனிய பகுதியைச் சேர்ந்த அசேல பெரேரா (வயது – 43) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நிர்வாணமாக தலையில் பலத்த காயத்துடன் இரத்தம் கசிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளின் தலைக்கவசம் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாரவில தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்