கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மட்டக்களப்பு – பாசிக்குடா கடற்கரைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை அவதானிக்க முடிகிறது.
சித்திரைப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு உள்நாட்டுஇ வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாசிக்குடா கடற்கரையை நோக்கி படையெடுக்கின்றனர்.
இந்நிலையில்இ கடற்கரை பகுதியில் இரண்டு மலசலகூடங்கள் மாத்திரமே காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய இயற்கைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபை நிர்வாகத்தினர் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.