கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இறக்குமதி செலவினம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டிற்கு இறக்குமதி மரக்கறி வகைகளுக்காக 11,658 கோடி ரூபாவும், பழங்களுக்காக 1,308 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டில் எரிபொருள் இறக்குமதிக்காகவே அதிகளவில் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.