பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள் வெட்டு குழுவினரின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேச முல்லையடி கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேரை கொண்ட குழுவொன்று வீடு ஒன்றை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டும் வீசி விட்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.