சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










